ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்று ,
முக்காலை ஊன்றி மூவிரண்டு செல்கையில்
ஐந்து தலை நாகம் அழுத்த கடித்துது .
என்று சொல்கிறார்.
அதற்க்கு அந்த மருத்துவர்,
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி தேய்.
என்று மருத்துவம் சொல்கிறார்.
நோயாளி கூறியதின் விளக்கம் :
முக்காலை ஊன்றி - அவருடைய இரண்டு கால்களுடன் குச்சி ஊன்றி
மூவிரண்டு செல்கையில் - ஆறு நோக்கி போகும் பொழுது
ஐந்து தலை நாகம் அழுத்த கடித்துது - (நெருஞ்சி முள்ளில் ஐந்து பக்கமும் ஐந்து முள் இருக்கும்). அதாவது நெருஞ்சி முள் குத்தியதை பாம்பு கடித்ததாக கூறுகிறார்.
மருத்துவர் கூறியதின் விளக்கம்:
பத்துரதன் - பத்து என்றால் தசம் என்று அர்த்தம். அதாவது தசரதன்.
புத்திரனின் - புத்திரன் என்றால் மகன் . தசரதனின் மகன் ராமன்.
மித்திரனின் - மித்திரன் என்றால் நண்பன். அதாவது ராமனின் நண்பன் சுக்கிரவன்.
சத்துருவின் - சத்துரு என்றால் எதிரி. சுக்கிரவனின் எதிரி வாலி.
பத்தினியின் - பத்தினி என்றால் மனைவி. வாலியின் மனைவியின் பெயர் தாரை.
கால் வாங்கி தேய் - தாரையில் உள்ள காலை எடுத்தால் தரை. அதாவது தரையில் தேய். சரியாகி விடும்.
இந்த பாடலை காளமேகப் புலவர் என்ற சங்க இலக்கியப் புலவர் எழுதியுள்ளார்.
இவர் இது போன்ற பாடல்களிலும் இரு பொருள் தரும் படல்களிகளிலும் சிறப்பு புலமை பெற்று விளங்கியவர். பயணிகளுக்குப் பிடித்திருந்தால் உங்கள் வாசகங்களை பதிவு செய்யுங்கள். இது போன்ற அவருடைய பாடல்களை உங்களுக்காக வலையில் எழுதத் தயாராக இருக்கிறோம்.
வாவ். ரொம்ப அழகா எழுதியிருக்கிறார் காளமேகப் புலவர். இது போல் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுங்க :-)
ReplyDeleteபஸ் பயணம் ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு :-)
மிகவும் அருமை. இது போன்று நிறைய எழுதுங்கள் காளமேகப்புலவரின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும் தொடருங்கள்......
ReplyDeleteபாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளுடன்...
பிரவின்குமார்.
@ vijay & praveen
ReplyDeletemikka nandri...ungal aatharavudan innum neria nalla pathivugalai tharuvom
Chithu ... finally i have identified u...
ReplyDeleteppa... ennama yosichurukanga?
ReplyDeleteமிகவும் அருமை
ReplyDeleteஇது காளமேகப்புலவர் எழுதுனது இல்லியே. இரட்டை புலவர்களின் சிலேடை
ReplyDelete