அவருக்கும் மட்டும் இல்லாமல் முருகன், விநாயகர், திருமால் மற்றும் சிவனின் பக்தர்களுக்கும் ஆறுதலைன்னு சொல்லியிருக்கிறார். எப்படி பரமசிவனுக்கு ஆறுதலைன்னு யோசித்துக்கொண்டே பதிவைப் படிக்க ஆரம்பிங்க.
ஐங்கரற்கும் மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை; பித்தா! நின்பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!
விளக்கம்:
ஐங்கரன் என்பவர் விநாயகர். அவருக்கு எவ்வாறு ஆறுதலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். இங்கு தான் புலவர் அவருடைய சொல் நயத்தை கையாண்டுள்ளார். இங்கு அது ஆறுதலை இல்லை மாறுதலை. அதாவது விநாயகருக்கு மனிதத் தலை இல்லாமல் மாறாக யானையின் தலை இருப்பதை மாறுதலை (மாற்றுத் தலை) என்று கூறியுள்ளார்.
(சங்கைப் பிடித்தோர் - பாற்கடலில் வாசுகிப் பாம்பு கக்கிய விஷத்தை சிவபெருமான் உண்ணும் பொது உமையாள் அவர் கழுத்தில் உள்ள சங்கைப் பிடித்தார். அப்போது அந்த விஷம் கழுத்தில் பரவியது. கழுத்தில் பரவிய விஷத்தை(சங்கைப் பிடித்தது விஷம்) கக்கிய வாசுகி பாம்பின் தலைவன் ஆதிசேஷன். அவர் திருமாலின் அவதாரம். அகவே திருமாலுக்கு பாம்பின் தலை இருப்பதால் அவருக்கும் மாறுதலை(மாற்றுத் தலை) என்றும் கூறலாம்.)
பித்தா - பித்தன் என்பது சிவனின் பெயர். அதாவது சிவனின் பாதத்தை சரணடைந்தவர்க்கு அவர்கள் அடையும் ஆறுதலைப் பார் என்று வியந்து கூறுவது போல் பாடலை சொல் நயத்துடன் எழுதியுள்ளார்.
பயணிகளுக்குப் பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.
aaha.. inga oru thamizh classae nadakkudhu.. superu.. aana kaalamega pulavar paatu mattum dhaan poduveengala? illa mella mella matha topicsum varuma?
ReplyDelete@G3
ReplyDeleteகருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. பயணிகளின் அனைத்து விருப்பங்களும் அவர்களுடைய சம்மதத்துடன் பதிவாக வெளியிடப்படும்.
தமிழ்த் தொண்டு ஆறுதலைத் தருகிறது...."அய்ங்கரனுக்கும் மாறுதலை" என்ற வரிகளில் ம் வராது என்று தோன்றுகிறதே...
ReplyDeleteஅருமையான விளக்கம். ரசிக்க வைத்தது.
ReplyDeleteவாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள்
இன்னா தலைவா கபால்னு அன்மீகம் பக்கம் போயிட்டிங்க...
ReplyDelete@ஸ்ரீராம்
ReplyDeleteஅய்ங்கரனுக்கும் மாறுதலை - இதில் பிழை இல்லை. எனென்றால் முதல் இருவர்க்கு ஆறுதலை என்று கூறியுள்ளார். பின்பு இங்கே "ம்" போடவில்லையெனில் படிபவர்க்கு புலவரின் சொல் விளையாட்டு புரிந்து விடும் என்பதற்க்காக "அய்ங்கரனுக்கும்" - அவருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hi
ReplyDeleteஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
@jakkie
ReplyDelete//இன்னா தலைவா கபால்னு அன்மீகம் பக்கம் போயிட்டிங்க...//
வாங்க ஜாக்கி, நம்ம பதிவு ஒரு காக்டைல் மாதிரி எல்லாம் கலந்திருக்கும்!!!
kaise khahe hume kitni mohabbat hai .... 23c mein travel karna ...
ReplyDeletechaancela .engenthunga ithelam pudikareenga..pazhaiya kaalathu gokulam mathiri iruku ugna post..ithey mathiri vera paatulam keadcha athuvum podunga..its wonderful to read them again
ReplyDeleteSupera erukku :) ana bus dhaan konjam adi vangina maari erukku :P
ReplyDelete@Balaji.V, girls & Srivats
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி.பயணிகளின் ஆதரவே எங்களின் உற்சாகம். கட்டாயம் எங்களின் பதிவு தொடரும்.அதே போல் உங்களின் ஆதரவைத் தரவேண்டும்.
சுவாரசியமான பதிவு தோழரே!
ReplyDelete