அதென்ன வசை என்ற கேள்வி பயணிகளுக்குத் தோன்றுவது எங்களுக்குப் புரிகின்றது. வசை என்பது ஒருவரை நோக்கி கொடும் சொற்களால் திட்டுவது. வசை மீட்சி என்றால் அந்த வசையைப் புகழாக மாற்றுவது. அப்படி காளமேகப்புலவர் வசை பாடும் அளவுக்கு குற்றம் செய்தது யாரென்று பார்ப்போம்.
ஒரு முறை நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தான் வருணகுலாதித்தன் என்பவனது சத்திரத்திற்கு புலவர் உணவு அருந்துவதற்குச் சென்றிருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் உணவு பரிமாறப்படவில்லை. ஆகவே கோபமடைந்த புலவர் வசைப் பாடலைப் பாடினார்.
பாடல்:
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.
விளக்கம்:
இந்த ஒரு பாடலுக்குள்ளே வசையும் உள்ளது வசை மீட்சியும் உள்ளது. எப்படியென்று பயணிகளுக்கு ஆச்சர்யம் உண்டாவது எங்களுக்குப் புரிகின்றது. முதலில் வசைக்கானப் பொருளைப் பாப்போம்.
வசை:
நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் சூரியன் மறையும் (மாலை நேரத்தில்) பொழுது அரிசி வரும். ஊரில் உள்ள அனைவரும் தூங்கிய பின்னரே அதை உலையிலிட்டு உணவாக்குவர். அதை உண்பவர்க்கு பரிமாறும் பொழுது நடுஇரவு ஆகிவிடும் என்று வசையாகப் பாடியுள்ளார்.
பாடலைக் கேட்டவுடனே வந்திருப்பது காளமேகப்புலவர் என்று அறிந்துகொண்ட காத்தான், தன் சத்திரத்தின் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று எண்ணி வசைமீட்சிப் பாடல் பாடுமாறு கேட்டுக்கொண்டான். மறுபடியும் இதே பாடலைப் பாடி புலவர் வேறு விளக்கம் கொடுத்தார்.
வசை மீட்சி:
நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் நாட்டில் பஞ்சம் பட்டினி(அத்தமிக்கும்) உள்ள பொழுது அரிசி மூட்டைகள் கணக்கிலடங்காது வந்து இறங்கும். அதை சமைத்து (உலையில் இட்டு) ஊர்மக்களுக்குக் கொடுக்க அனைவரின் பசியும் அடங்கும். அவ்வாறு சமைக்கப்பட்ட அன்னத்தை(சோறு) இலையில் போடும் பொழுது அது நட்சத்திரத்தைப் போல் பிரகாசிக்கும் என்று வசையாகப் பாடியப் பாடலை வசைமீட்சிப் பாடலாகப் பாடியுள்ளார் நமது புலவர். இவ்வாறெல்லாம் பாடும் நுட்பம் காளமேகப்புலவருக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்தப் பாடலில் "ஓர்அகப்பை" என்ற ஒரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகப்பை என்றால் கரண்டி என்று பொருள். ஏன் ஒரு அகப்பை என்று பயன்படுத்தவில்லை?. ஓர் மற்றும் ஒரு என்பது சுட்டிடைச்சொல் (article like an and a). ஓர் அல்லது ஒரு இந்த சொற்களைத் தொடர்ந்து வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமைந்தால் "ஓர்" பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் "ஒரு" பயன்படுத்தப்பட வேண்டும். இங்கு "அகப்பை", அ என்ற உயிர் எழுத்து முதலில் உள்ளதால் இங்கு "ஓர்" பயன்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் கருத்துகளுக்கு ஆவலோடு காத்திருக்கின்றோம்.
vada is for me :))
ReplyDeleteithuvum padichirukken....soooper poem..unga source ethunga?
ReplyDelete@கில்ஸ்
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி!
aha neenga kalamega pulavar pathi niraya araichiye panirupinga polarke..? naan konjam kalamega pulavar pathi arainjuttu varren, apo than nalla puriyum paatu.
ReplyDeleteExcellent இலக்கணக்குறிப்பு. ஆங்கிலத்தில் articles மாதிரி இது தமிழில் போல இருக்கு. பாட்டு , பாட்டுக்கு விளக்கம் - ஆக்கா, அச்சரா.. கலக்கல். .. இதைப்போல இன்னும் நிறைய செய்யுள்களை அலசுங்களேன்.உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்.சில மாதங்களுக்கு முன்னர் ஒரு PDF File டவுன்லோட் செய்து இவருடைய இரட்டுற மொழிதல் பாடல்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒண்ணுமே புரியவில்லை. இந்த மாதிரி யாரவது சொல்லிகொடுத்தால் நல்ல இருக்குமேன்னு நெனச்சிருக்கேன். Thanks a ton. :)
ReplyDeleteஆங்கிலத்தில் articles மாதிரி இது தமிழில் போல இருக்கு.பாட்டும் பாட்டின் பொருளும் - Superb!
ReplyDeleteசில மாதங்களுக்கு முன்னர் ஒரு PDF File டவுன்லோட் செய்து இவருடைய இரட்டுற மொழிதல் பாடல்களை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒண்ணுமே புரியவில்லை. இந்த மாதிரி யாரவது சொல்லிகொடுத்தால் நல்ல இருக்குமேன்னு நெனச்சிருக்கேன்.இதைப்போல இன்னும் நிறைய செய்யுள்களை அலசுங்களேன்.
great work dude
ReplyDeleteSuper dude
ReplyDeleteSummma patya kelapunga
ReplyDelete