தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிறிய இடைவேளை ஏற்பட்டதற்கு முதலில் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சக வலைப்பூ நண்பர் கில்ஸ் அவர்கள் விரும்பிக்கேட்ட ககர வரிசையில் காளமேகப்புலவர் பாடிய பாடலையே நாங்கள் இன்று பயணிகளுக்குப் பதிவாக வெளியிட இருக்கின்றோம். (ககர வரிசை என்றால் தமிழில் உள்ள க, கா.... வரிசை என்று பயணிகள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறோம்)
பாடல்:
சக வலைப்பூ நண்பர் கில்ஸ் அவர்கள் விரும்பிக்கேட்ட ககர வரிசையில் காளமேகப்புலவர் பாடிய பாடலையே நாங்கள் இன்று பயணிகளுக்குப் பதிவாக வெளியிட இருக்கின்றோம். (ககர வரிசை என்றால் தமிழில் உள்ள க, கா.... வரிசை என்று பயணிகள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறோம்)
பாடல்:
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!
விளக்கம்:
இப்பாடலைப் பாடலில் உள்ள சீர்ப்படி படித்தால் கடினமாக இருக்கும். ஆகவே இங்கு நாங்கள் பயணிகளுக்காகப் பாடலை சீர் பிரித்து கொடுத்துள்ளோம்.
காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !
பாடலை இவ்வாறு சீர் பிரித்துப் பாடலாம். காக்கைக்கு ஆகா கூகை என்பது, இரவில் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) கண் நன்றாகத் தெரியும். ஆனால் காகத்திற்கு இரவில் கண் தெரியாது. ஆகவே இரவில் ஆந்தையும் காகமும் சண்டையிட்டால் ஆந்தையே வெல்லும்.
கூகைக்கு ஆகா காக்கை என்பது காகத்திற்கு பகலில் கண் தெரியும். ஆனால் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) பகலில் கண் தெரியாது. அகவே பகலில் காக்கையும் ஆந்தையும் சண்டையிட்டால் காகமே வெல்லும். .
கோக்கு கூ காக்கைக்கு என்பது, கோ என்றால் மன்னன். அதேபோல் கூ என்றால் உலகம். இங்கு காக்கை என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கொக்கு ஒக்க என்பது, கொக்கு என்றால் பறவையினத்தில் ஒன்றான கொக்கைக் குறிக்கும். அதாவது கொக்கு ஒக்க என்றால் "கொக்கைப் போல்" என்று பொருள். அதாவது "ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்கு கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும்" என்பது இந்த அடியின் பொருள்.
கைக்கைக்கு என்றால் "பகையை எதிர்த்து" என்று பொருள். காக்கைக்கு என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கைக்கு ஐக்கு ஆகா என்றால் திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்று பொருள்.
அதாவது ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்குக் கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்பதே இரண்டு மற்றும் மூன்றாவது அடியின் பொருள்.
இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட பல்சுவைப் பாடல்களைப் படுவதில் வல்லவரான காளமேகப்புலவர் இன்னும் சிறந்த பாடல்களெல்லாம் பாடியுள்ளார். அவைகளையும் இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்.
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறவாதீர்.
Me the firsta :)))))
ReplyDelete//அதாவது ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்குக் கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும்.//
ReplyDeleteஅவசரப்பட்டு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க கூடாதுனு சொல்ல வர்றாரோ?
//கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை)//
ReplyDeleteஎன்ன அகராதி உபயோகிக்கறீங்க நீங்க இதெல்லாம் கண்டுபிடிக்க.. சொன்னா உதவியா இருக்கும் :))))
@G3
ReplyDeleteகருத்துக்களுக்கு நன்றி.
//அவசரப்பட்டு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க கூடாதுனு சொல்ல வர்றாரோ? //
ஒரு செயலைச் செய்யும் முன்பு அச்செயலைச் செய்ய இது சரியான நேரமா என்று ஆராய்ந்து செயல்படவேண்டும் என்பதே பாடலின் உட்கருத்து.
காளமேகம் கலக்குறார். அப்பப்போ இப்படி சிலேடை பாடல்களை கொடுங்க.
ReplyDeleteரொம்ப நல்லா விளக்கம் கொடுத்து இருக்கீங்க.. :))
ReplyDeleteஇன்னும் நிறைய இது மாதிரி போடுங்க :)) நல்லா இருக்கும் :))
sooooper thala..kalakiteenga...my fav song :) ithu ennoda tamizh sir expln panna first timelaye manasula otikichi :) kalamega pulavaruku orkut community iuntha solunga :)
ReplyDeletesuper...
ReplyDelete@கில்ஸ், @fotoart, @Kanagu மற்றும் @ராஜா | KVR
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி!
23-C nu peru vechukittu ivlo seriousana/nalla padhivugal ellam poduvinga nu naan nenakakve illa! edho neengalum enngalai madhri mokkai poduvinga nu thappa nenachutene!
ReplyDeletearumaiya vilaki irukinga, ennai pol arivilikaluku udhavum :)
@Porkodi (பொற்கொடி)
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி!
23-c, நல்ல வேலை செய்திருகின்றீர்கள். ’தனிப்பாடல் திரட்டு’ நூலொன்றைப் படித்துவிட்டு, இன்றைய பொருளற்ற சொற்கோவைகளான பாடல்(எனக் கூறப்படுபவை)-களிலிருந்து காளமேகத்தின் ஒரே வரிசையின் எழுத்துக்களைக் கொண்ட இந்த பாடல் எத்துனை சிறந்தது என்பதனை என் நண்பர்களுக்கு கூற விழைந்தேன், அங்ஙணம் முயல்கையில் பாடலின் பிற்பகுதியை பதம் பிரிக்க தடுமாறுகையில் உங்களின் பதிவு உதவியது. மிக்க நன்றி. அன்புடன்... வி
ReplyDelete
ReplyDeleteகாக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
கூகை என்றால் ஆந்தையை குறிக்கும். காக்கையானது பகலில் கூகையை வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும்வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூடக் கையாலாகிவிடக்கூடும்.
திரு sundarjiprakash அவைகளின் blogspot-ல் இருந்து எடுத்த வரிகள் இவை. அப்பாடலுக்கு பொருத்தமான விளக்கமாக எனக்கு தோன்றுகிறது