
கண்ணீரை துடைப்பது
உன் விரல்கள் என்றால்
அழுகை கூட ஆனந்தம்தான்...
அழுவதற்கு ஆசை
அரவணைப்பது நீ என்பதால்...
உன்னால் ஏற்படும்போது
சோகம் கூட சுகமானது
சுகம் சுகந்தமானது...
ஆனந்தமடைந்தது
வாழ்த்து அட்டைக்கு
அல்ல!
கொடுத்தது நீ
என்பதால்...
ஒற்றை வார்த்தையும்
கவிதையானது
உனது பெயரை
எழுதுகையில்...
மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு பேருந்து மீண்டும் இயக்கபடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கவிதை பகிர்வுகள் அனைத்தும் அருமை..!
ReplyDeleteமீண்டும் வண்டி கிளம்பியதில் மகிழ்ச்சி...
ReplyDeleteகவிதைகளை ஏற்கனவே எங்கேயோ படித்த உணர்வு... ஓ... காதலித்த போழ்துகளின் சொற் பரிமாணம் இவையா! :-)
“காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம்தானே...” என்ற பாடலும், தங்கள் கவிதையும் எல்லா காதலனுக்கும் (காதலிகளுக்கும்?!) சமம்தானே!
வாழ்கையை வார்த்தையில் தந்தமைக்கு நன்றி கவிஞரே!
உனக்காக காத்திருந்து
ReplyDeleteஎன் உயிர் பிரியுமென்றால்
அதைவிட வேறன்ன
வேண்டும் சொல்லன்பே
நான் விட்டமூச்சுக்கும்
நான் விடும்மூச்சுகுமான
சுவாசமே நீதானே....
......................
நான் உன்னை நேசிப்பதை
மறந்து விடுவேனோ என்ற
கவலை உனக்கு வேண்டாம் .
நான் நேசித்தால்தானே
உன்னை மறப்பாதற்கு
உன்னை சுவாசித்துக்கொண்டு
அல்லவா இருக்கிறேன்
........................
சோர்ந்து விட்டேன்
சொந்தங்களை நாடி..
ஓய்ந்து விட்டேன்
உண்மையை தேடி....
துவண்டு விட்டேன்
துயரங்களை தோண்டி....
வல்லமையின் வாய்ப்புகளை
வஞ்சகம் வெல்வதேனோ...???
"தூய்மை" நட்பிலும் இல்லையே...!!!!!
"துரோகம்" தொடர்கதை ஆனதே...!!!!!!!
என் நெஞ்சினில் எண்ணிலடங்கா
முள் குத்தலின் வலிகள்...
.................................
யஹ்யா,ஹொரோவபதான