Thursday, October 21, 2010

கிறுக்கல்கள் - 2


என் இதயம் என்ற
கருவறை சுமக்கின்ற
குழந்தை - நீ...

என்னைச் சுற்றி
கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சிகள் -
உன்னைப் பற்றிய
நினைவலைகள்!

நாம் அறிந்த
நம் இதயங்களின்
மொழி - மௌனம்

என் நகங்களில்
நட்சத்திரங்கள் மின்னக்கண்டேன்
நீ புறங்கையில் இட்டமுத்தம்
என் நரம்புகளினஊடே பரவுகையில்.....

என்னுடன் நீ
இல்லை....
இல்லாமல் இருக்கின்றாய்
நானோ இறந்தும்
வாழ்கிறேன்!

3 comments:

  1. அனைத்தும் இரசிக்கும்படியாக அருமையாக உள்ளது..!!

    ReplyDelete
  2. ஹ்ம்ம்ம்.... மாலைப் பொழுதில், தனிமையில், மெல்லிய குரலில் இவற்றைப் படித்தால்... படித்துப் பாருங்கள் - காதலித்தவர்கள் மட்டும்!

    ReplyDelete