Sunday, August 2, 2009

காளமேகப்புலவர் பெண்ணிடம் போட்டப் புதிர்.........

ஒரு முறை ஒரு பெண் கவி காளமேகப்புலவரிடம் இதுவரை எங்கும் கேட்டிராத ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரும் அப்பெண் விழி விரித்து ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கின்றார்.

அப்படியென்ன பாடலைப் பாடிவிட்டார் என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். அப்பாடலைப் பற்றியே இந்த பதிவில் பேசப் போகின்றோம்.


பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!

விளக்கம்:

பூநக்கி என்றால் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் வருவதில் சந்தேகமில்லை. நாம் அனைவருக்கும் தெரிந்தது பூனை. புலவர் பூனையைக் குறிப்பிடுகிறார் என்றால் அதற்கு இரண்டு கால் தானே என்று யூகிக்கத் தோன்றும். இங்கு தான் புலவர் தன் சொல் நயத்தை மேன்மையாகக் கையாண்டுள்ளார். இங்கு பூநக்கி என்பது பூவை நக்கித் தேனை உறிஞ்சும் தேனீ . அதாவது தேனீக்களுக்கு ஆறுகால் என்பதை அவ்வாறு கூறியிருக்கிறார்.

புள்இனம் என்றால் பறவையினங்கள். அது சரி பறவைகளுக்கு எப்படி ஒன்பது கால். இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். அதாவது 9 * 1/4 = 2 1/4. ஒன்பதைக் காலால் பெருக்கினால் இரண்டே கால் வரும். அதாவது பறவை இனங்களுக்கு இரண்டே கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இங்கு யானையை ஆனை என்று கூறியுள்ளார். மேலே கூறியது போல் 17 * 1/4 = 4 1/4. பதினேழை காலால் பெருக்கினால் நாலேகால். அதாவது ஆனைக்கு நான்கு கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.


பின்பு அப்பெண்ணைப் பார்த்து, பெண்ணே கேள்(மானே! கேள்!). முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின் செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை உடையவர் அன்னை உமையாள். தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய அன்னை உமையாளுக்குக் கொடுத்தது தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது (பூத்ததுண்டு) என்றும். இக்காட்சியைக் காண முடியும் என்றும். அதற்க்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார். அதாவது இக்காட்சியை கண்ணால் மட்டுமே காண முடியும். இதற்கான சான்றை எங்கும் கேட்க்க முடியாது என்று பாடலை முடித்துள்ளார்.

பதிவு பிடித்திருந்தால் கருத்துகளைப் பதிவு செய்யவும். கருத்துகள் வரவேற்க்கப் படுகின்றன. இதே போல் உங்களுக்கும் ஏதாவது பாடல் தெரிந்திருந்தால் கருத்துக்களுடன் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் . எங்கள் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.

12 comments:

  1. பாடலும் அதற்கேற்ற விளக்கமும் அருமை. பகிர்விற்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. மிக்க நன்றி சென்ஷி

    ReplyDelete
  3. நல்லதொரு பதிவு.

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. fantastic expln...ithey pola neria postunga :) very interesting to read

    ReplyDelete
  5. //காதல் என்பது பாட்டி சுட்ட வடை மாதிரி
    ஒழுங்கா பார்த்துகலைனா காக்கா தூக்கிட்டு போய்டும்!
    ஆனா நட்பு என்பது அந்த பாட்டி மாதிரி
    ஒருத்தனும் தூக்கிட்டு போகமாட்டான்!!//

    rotfl :D :D chaaancela

    ReplyDelete
  6. @ gils

    thank u very much!...
    unga koda ellam pazhagi intha alavukku koda thathuvam solalana eppadi!

    ReplyDelete
  7. hey...kaakkaigaga koogai..koogaikaaga kaaakai..antha paatu desc vachirukeengala? it wl come something like..kaakaku koaataan pagai..daytimela kakka jeikum..aana nite timela koatan jeyikum..etho varum intha mathiri..antha paatum kaalamega pulavarthu thaanu nenakrenn..kedaicha parunga

    ReplyDelete
  8. @gils

    kattayam antha paadal padhivil idam perum

    ReplyDelete
  9. நன்றிகள். அருமையான விளக்கம்.

    ReplyDelete
  10. அய்யா எனக்கு விளக்கம் பிடித்திருந்தது. ஆனால் ஒரு சந்தேகம் சிவனை பார்வதி யை காட்சி படுத்த பூனை ஆணை உவமை ஏன்?

    ReplyDelete